30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: புதுச்சேரியில் 490 நபர்களுக்கு கொரோனா

7 October 2020, 4:57 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 490 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது.

புதுச்சேரி, மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் மாநில அரசு, சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் 355 நபர்களுக்கும், காரைக்காலில் 65 நபர்களுக்கும், ஏனாமில் 13 நபர்களுக்கும், மாஹேவில் 57 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 4,680 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24,930 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 2 நபர்கள் தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 551 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 30,161 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 34

0

0