புதுச்சேரியில் புதிதாக 337 நபர்களுக்கு கொரோனா

Author: Udayaraman
10 October 2020, 7:38 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 337 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 241 நபர்களுக்கும், காரைக்காலில் 31 நபர்களுக்கும், ஏனாமில் 8 நபர்களுக்கும், மாஹேவில் 57 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 4719 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 25955 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 1 நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 31233ஆக உயர்ந்துள்ளது.

Views: - 29

0

0