இளைஞரை போதையில் அடித்துக் கொன்று முட்புதரில் வீசிய சம்பவம் : 8 பேரை கைது செய்து விசாரணை

Author: Udayaraman
4 August 2021, 11:56 pm
Quick Share

திருவள்ளூர்: தாமரைப்பாக்கம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுமானத்தின் பிளம்பர் வேலை பார்க்க வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை கஞ்சா மற்றும் மது போதையில் அடித்துக் கொலை செய்த 8 பேரை வெங்கல் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை, விச்சூர் தொழில்பேட்டை, திருமுல்லைவாயில் தொழிற்பேட்டை, காக்களூர் தொழில்பேட்டை உள்ளிட்ட முக்கிய தொழில் பேட்டைகளில் பணியாற்றும் வடமாநில மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை அவர்கள் ஊதியம் பெறும் நாட்களில் அவர்களை வழி மறித்து வழிப்பறி கும்பல் கஞ்சா மற்றும் மது போதையில் கத்தியை காட்டி அவர்களை தாக்கி பணத்தைப் பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் தாமரைப்பாக்கம் அருகே உள்ள பூச்சி அத்தி பேடு கிராமத்தில் காவல் உதவி மையம் அருகிலேயே இதே போன்றதொரு சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மதன்குமார் ஏடிஎம் மில் பணம் எடுத்து கொண்டு தான் தங்கியிருந்த அறைக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவரை 8 பேர் மர்ம கும்பல் வழிமறித்து பணத்தைப் பறிக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட தகராறில் பூச்சி அத்திப்பேட்டை சேர்ந்தவர்களுக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டனர். அதில் பூச்சிஅத்திபேடு கும்பலிடம் சிக்கிக் கொண்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த மதன்குமார் கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது சடலத்தை யாருக்கும் தெரியாமல் அக்கும்பல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டி வரும் கட்டிடத்தை ஒட்டி செல்லும் கொசஸ்தலை ஆற்றில் முட்புதரில் வீசி சென்று விட்டனர்.

இதனிடையே தகராறில் தப்பி ஓடிய திருவண்ணாமலையைச் சேர்ந்த இறந்துபோன மதன்குமார், தம்பி அருண் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மாயமான மதன்குமார் குறித்து வெங்கல் காவல் துறைக்கு புகார் அளித்த நிலையில், பூச்சிஅத்திப் பேட்டை சேர்ந்த சிவா, முருகன், நாகராஜ், சுணில் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து வெங்கள் காவல்துறை விசாரணை செய்ததில், மதன்குமார் கொலை செய்து ஆற்றில் முட்புதரில் வீசிய விபரத்தை தெரிவித்தனர். அதனை அடுத்து அழுகிய நிலையில் இருந்த மதன்குமார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கஞ்சா போதையில் தகராறு ஏற்பட்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுமான பணிக்கு திருவண்ணாமலையில் இருந்து வந்து தங்கி பிளம்பர் வேலை பார்த்த தொழிலாளி மதன் குமார் அடித்துகொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பணியாற்றும் பிற தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 155

0

0