மதுரையில் பிரபல தனியார் ஹோட்டலில் வருமான வரி சோதனை

4 November 2020, 3:57 pm
Quick Share

மதுரை:மதுரையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் நிறுவனத்துக்கு சொந்தமான ஐந்து இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை கோச்சடைபகுதியில் இயங்கி வருகிறது ஹெரிடேஜ் என்ற ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி. இந்நிறுவனத்திற்கு அருள்தாஸ்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஹெரிடேஜ் ஹோட்டலுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஹோட்டலில் ஜி.எஸ்.டி வரி மற்றும் வருமானங்கள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரி ஏய்ப்பு மற்றும் வருமானம் சார்ந்த தகவல்கள் மறைக்கப்படுவதாகவும், இதனடிப்படையில் வருமான வரித்துறை தற்போது சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Views: - 21

0

0