கன்னியாகுமரியில் படகுசேவையின் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும்: சுற்றுலா சங்கம் முதல்வருக்கு கோரிக்கை

25 November 2020, 1:41 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் படகுசேவை தூரத்தை அதிகப்படுத்த தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி சங்க நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர் .

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி யில் இன்று முதல் அதிகார்வபூர்வமாக படகுசேவை தொடங்கப்பட்டது.படகுசேவை தொடங்கியதை அடுத்து கன்னியாகுமரி சுற்றுலா வளர்ச்சி சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது;- கொரோனா பாதிப்புக்கு பின்னர் சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடந்த 8 மாதங்களுக்கு மேலாக படகுசேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் வந்த தமிழக முதல்வர் கன்னியாகுமரியில் படகுசேவை தொடங்கப்படும் என்று உத்தரவிட்டார். அதன் படி இன்று படகுசேவை தொடங்கியது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி,டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோல் கன்னியாகுமரியில் தான் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை காணமுடியும்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஒரு நாள் முழுவதும் சுற்றி பார்க்கும் வகையில் காலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரையிலும், மாலையில் கன்னியாகுமரி முதல் மணக்குடி வரையிலும் படகுசேவையை நீட்டித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் சுற்றுலா தொழில் மேம்படவும் ஏதுவாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Views: - 0

0

0