NASAவின் புதிய பத்து உறுப்பினர்கள் கொண்ட விண்வெளி வீரர்கள் குழுவில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி…!!!

Author: Hemalatha Ramkumar
7 December 2021, 4:57 pm
Quick Share

அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், NASAவின் எதிர்காலப் பணிகளுக்காகப் பணியாற்றவும் 12,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 புதிய விண்வெளி வீரர்களை NASA திங்களன்று அறிவித்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் இரண்டு வருட ஆரம்ப விண்வெளி வீரர் பயிற்சியை முடிப்பதற்காக 2022 ஜனவரி முதல் பணியில் சேர உள்ளார். உக்ரேனிய மற்றும் இந்திய பெற்றோர்களுக்கு பிறந்த அவர், 2014 இல் NASA விமான சர்ஜியன் நிபுணராகத் தொடங்கினார் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நான்கு நீண்ட கால குழு உறுப்பினர்களை கொண்ட துணை குழுவில் சர்ஜியனாகவும் இருந்துள்ளார்.

2018 இல், அவர் SpaceX இல் சேர்ந்தார் மற்றும் நிறுவனத்தின் முதல் மனித விமானங்களுக்குத் தயாராக உதவினார். அவர் ஐந்து ஏவுகணைகளுக்கு முன்னணி விமான சர்ஜியனாக பணியாற்றினார். அவர் அவசர மருத்துவம் மற்றும் விண்வெளி மருத்துவம் குறித்து பல அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

NASA நிர்வாகி பில் நெல்சன் 2021 விண்வெளி வீரர்கள் வகுப்பிற்கான உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். இது நான்கு ஆண்டுகளில் முதல் புதிய வகுப்பாகும். “இன்று நாங்கள் 10 புதிய ஆய்வாளர்கள், ஆர்ட்டெமிஸ் தலைமுறையைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள், NASAவின் 2021 விண்வெளி வீரர் வேட்பாளர் வகுப்பை வரவேற்கிறோம்” என்று நெல்சன் கூறினார். “இதில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரிடமும் சிறந்த திறமைகள் உள்ளன. ஆனால் அவர்கள் ஒன்றாக நம் நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.”

வெளியீட்டின் படி, விண்வெளி வீரர் வேட்பாளர் பயிற்சி ஐந்து முக்கிய வகைகளில் விழும்:
*சர்வதேச விண்வெளி நிலையத்தின் சிக்கலான அமைப்புகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல்
*விண்வெளி நடை பயிற்சி
* சிக்கலான ரோபாட்டிக்ஸ் திறன்களை வளர்த்தல்
*டி-38 பயிற்சி ஜெட் விமானத்தை பாதுகாப்பாக இயக்குதல்
* ரஷ்ய மொழி திறன் பயிற்சி

Views: - 117

0

0