சுதேசி மில் பணியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்….

14 January 2021, 2:46 pm
Quick Share

புதுச்சேரி: தமிழக அரசு மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி புதுச்சேரி சுதேசி மில் எதிரே 50 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழகத்தில் பணியாற்றி வந்த 13 ஆயிரத்து 500 மக்கள் நல பணியாளர்களை கடந்த 2011 ம் ஆண்டு பணியிட நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்பிறகு மக்கள் நல பணியாளர்கள் நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் அடிப்படையில் 2014 ம் ஆண்டு நீதிமன்றம் அவர்களுக்கு வேலை கொடுக்க உத்தரவு பிறப்பித்து இதுவரை அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.

அவர்களுக்கு பணிவழங்க பலகட்ட போராட்டம் நடத்தியும் அரசு பணி வழங்காததால், அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் புதுச்சேரியில் வந்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு சுதேசி மில் அருகே 50 க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தமிழக அரசை ஈர்க்கும் வகையில் பிட்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். அரசு இதுவரை வழங்காததால் உடனடியாக வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

Views: - 2

0

0