கட்டண கொள்ளையை தடுக்க கோரி தனிநபர் போராட்டம்

9 July 2021, 3:57 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனா காலத்தில் கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனிநபர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதுவை உருளையான்பேட்டை சங்கோத்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலைசெல்வன். இவர் இன்று சைக்கிளில் சட்டசபை நுழைவு வாயிலுக்கு வந்தார். தனது கையோடு கொண்டு வந்திருந்த தட்டி போர்டுடன் சட்டடசபை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அந்த பேனரில் அரசு உத்தரவை மீறி பேரிடர் காலத்தில் கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி.. கட்டணத்தை அரசே நிர்ணயிக்க கோரி என எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து சட்டசபை முன்பு பரபரப்பு ஏற்பட்டது. அவரை சட்டசபை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி பெரியகடை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

Views: - 298

0

0