தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்கவில்லை:விவசாயிகள் புகார்…

Author: kavin kumar
19 August 2021, 5:31 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்கப்பட்ட காரணத்தினால் குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே குறுவை சாகுபடி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், தற்பொழுது சம்பா சாகுபடிக்கான முதல்கட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். திருவாரூர் அருகே கள்ளிக்குடி, அடியக்கமங்கலம், ஆண்டிபாளையம், மாங்குடி, தப்பளாம்புலியூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது வயல்களை டிராக்டர் மூலம் உழவு அடித்து விதைகளை தெளித்து வருகின்றனர். மேலும் சில விவசாயிகள் நேரடி விதைப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 264

0

0