அல்லேரி மலை கள்ளசாராய பிரச்சனையில் அப்பாவி மக்களை தண்டிக்க கூடாது: திமுக சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

1 September 2020, 11:46 pm
Quick Share

வேலூர்: அல்லேரி மலை கள்ளசாராய பிரச்சனையில் அப்பாவி மக்களை காவல்துறை தண்டிக்க கூடாது என்றும், தவறு செய்தவர்களின் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூரில் திமுக அலுவலகத்தில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- வேலூர் பொலிவுறும் நகரம் திட்டத்தில் ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு எந்த பணிகளும் சரிவர செயல்படவில்லை எல்லாவற்றிலும் ஊழல் நடக்கிறது. மாநகராட்சியில் பணிகள் எதுவும் நடக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

இல்லையென்றால் திமுக நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து ஊழல்களை வெளிகொண்டு வருவோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை கேட்டுள்ளோம் மக்கள் பிரச்சணைகளுக்காக திமுக விரைவில் போராட்டம் நடத்தும். மேலும் பாலாற்றை நம்பியிருந்த வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய ஐந்து மாவட்டங்கள் குடிநீர் தட்டுபாடு ஏற்படுவதற்கு காரணம் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே பல தடுப்பனைகளை கட்டிவிட்டது. அத்துடன் மோர்தானா அனைக்கு வரும் தண்ணீரையும் தடுத்து நிறுத்தி அணைக்கட்டிவிட்டனர்.

இதனால் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு பாலாற்றின் குறுக்கே பல்வேறு தடுப்பணைகளை கட்டுவோம் என தமிழக அரசு அறிவித்தது அது அறிவிப்போடு இருக்கிறது. எனவே இதுவரையில் ஒரு தடுப்பணையை கூட தமிழக அரசு கட்டவில்லை இனியாவது ஆற்றின் குறுக்கே தடுப்பனைகளை அமைக்க வேண்டும். வேலூர் காட்பாடி உள்ளிட்ட நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் திணறுகின்றனர். எனவே புறவழிசாலைகளை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0