மண்டியிட்டு திருவோடு விவசாயிகள் ஏந்தி நூதன போராட்டம்…

23 February 2021, 5:57 pm
Quick Share

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு மண்டியிட்டு திருவோடு ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் சாலையில் மண்டியிட்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.இந்தப் போராட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக இலவச விவசாய மின் இணைப்பு , டாப்செட்கோ விவசாய மின் இணைப்பு காலம் தாழ்த்தாமல் வழங்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் புதிய வேளான் திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும். 2020 – 2021 குடி மராத்து பணிகள் சரிவர நடக்கவில்லை, தடுப்பணைகள் நல்ல தரத்துடன் நடைபெறவில்லை அரசு ஆய்வு செய்ய வேண்டும். முந்திரி விவசாயம் தமிழகத்தில் அழிந்துவருகிறது . அரியலூரில் முந்திரி கொள்முதல் தொழிற்சாலை அமைக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ .4000 / -விலை அறிவிக்க வேண்டும் . கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவை தொகையை அரசு பெற்று தரவேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைக்கடன் , பயிர்கடன் விவசாயம் சார்ந்த கடன் தள்ளுபடி என அறிவிக்க வேண்டும். கூட்டுறவு சொசைட்டியில் டாப்செட்கோ மான்யகடன் தள்ளுபடி என அறிவிக்க வேண்டும். குப்பநத்தம் அணை தண்ணிரை செங்கம் தாலுக்கா , திருவண்ணாமலை , கீழ்ப்பொன்னாத்தூர் தாலுக்கா வரை வாய்க்கால் வெட்டி கொண்டு செல்ல நிதி ஒதுக்க வேண்டும். சொசைட்டியில் முந்திரிக்கொட்டை மூட்டை , அடமான கடன் , தள்ளுபடி என அறிவிக்க வேண்டும். வேர்கடலைக்கு விலை உயர்த்தப்பட வேண்டும் .

மார்கெட்டிங் கமிட்டியில் 40 கிலோ மூட்டையாக கொள்முதல் செய்ய வேண்டும்‌. பருத்திக்கு விலை உயர்த்த வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளான இவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாணத்துடன் சாலையில் மண்டியிட்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 7

0

0