காவிரி ஆற்றில் அஸ்தியை கலக்கும் நூதன போராட்டம்

Author: kavin kumar
28 October 2021, 6:28 pm
Quick Share

திருச்சி: மோடியின் செயலால் விவசாயிகள் இறந்ததாகக் கூறி காவிரி ஆற்றில் அஸ்தியை கலக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும் முதலான கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து கரூர் பைபாஸ், மலர் சாலையில் பிறந்து கடந்த 12ஆம் தேதி முதல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் இரண்டு மடங்கு லாபம் தரும் விலை தந்து விவசாயிகள் நெஞ்சில் நிறைவை ஏற்படுத்துகிறேன் என்று கூறிய மோடி கடந்த ஏழு வருடங்களாக இரண்டு மடங்கு லாபகரமான விலை தராமல் விவசாயிகளை மோடி ஏமாற்றி விவசாயிகள் நெஞ்சில் கல்லை தூக்கி போட்டு விட்டார் என்பதை சுட்டிக்காட்டு விதமாக நெஞ்சில் கல்லை போட்டு கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோடி விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் நெஞ்சில் கல்லை போட்டு விட்டதால் விவசாயிகள் இறந்து விட்டனர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பாடைகட்டி, சங்கு ஊதி தப்படித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இன்று மோடி செயலால் இறந்த விவசாயிகள் அஸ்தியை சாம்பல் அடங்கிய சட்டியை காவிரியாற்றில் விடுவதற்காக செல்ல முற்பட்டனர். ஆனால். காவிரி ஆற்றுக்கு செல்ல கூடாது எனக்கூறி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அதே இடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், இந்தியா ஒரு ஜனநாயக நாடா, சர்வாதிகார நாடா என தெரியவில்லை. ஜனநாயகம் சட்டத்தின் படி நாங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எங்கும் செல்லலாம் எங்களுக்கு முழு உரிமை உள்ளது.ஆனால் மோடி இந்தியாவை சர்வாதிகார நாடாக கொண்டு வரப் போகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. விவசாயிகளை வீட்டுக்காவலில் வைத்து இருக்கிறார்கள்.

இனி நாட்டு மக்களையும் வீட்டு காவலில் வைப்பார்களோ என்ற பயம் இருக்கிறது. இறந்த விவசாயிகளின் மண்டை ஓடு, எலும்புகள் வைத்து பூஜை பண்ணி மோடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும், மூன்று வேளை விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், விவசாய நல்ல விலை கொடுக்க வேண்டும் விவசாய கொன்றவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என கூறி பூஜை பண்ணி காவிரி ஆற்றில் கரைப்பதற்கு கூட அனுமதிக்காமல், நடப்பதற்கு கூட அனுமதி இல்லை என கூறுகின்றனர்.
எங்களை தொடர்ந்து 28 நாட்களாக வீட்டுக்குள் வைத்து இருக்கிறார்கள்.இது மோடி நாட்டுக்கு சர்வாதிகாரத்தை கொண்டு வருகிறார் என்பது தான் என தெரிவித்தார்.

Views: - 163

0

0