துணிக்கடையில் நூதன முறையில் திருட்டு: பட்டதாரி பெண் கைது

Author: Udhayakumar Raman
27 November 2021, 2:24 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் துணிக்கடையில் 16 ஆயிரம் ரூபாய்க்கு துணிகள் வாங்கி கொண்டு கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதாக கூறி ஏமாற்றி விட்டுச் சென்ற பி.டெக் பட்டதாரி பெண்ணை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி குண்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம், இவர் காந்தி நகர் வழுதாவூர் சாலையில் துணிகடை ஒன்று நடத்தி வரும் நிலையில், இவரது கடைக்கு கடந்த 19 ஆம் தேதி வந்த பெண் ஒருவர் 8 ஆயிரம் ரூபாய்க்கு துணிகள் வாங்கி கொண்டு அதற்கான பணத்தை கூகுள் பே செய்துவிட்டதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அந்த பணம் தனிகாசலத்தின் வங்கி கணக்கிற்க்கு வராமல் இருந்துள்ளது. இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இது குறித்து தங்களின் சங்க தலைவர் முருகானந்ததிடம் நடந்தவை குறித்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் இதே போல் அருகாமையில் உள்ள திலாசுபேட் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு துணிகடையிலும் 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் 8000 ரூபாய்க்கு துணிகள் எடுத்து கொண்டு பணம் தராமல் சென்று விட்டதாக தெரிவித்த அவர்,

இரண்டு கடையின் உரிமையாளர்களையும் அழைத்து கொண்டு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது இரண்டு கடையிலும் ஒரே பெண் தான் ஏமாற்றி சென்றுள்ளார் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து, அப்பெண் குறித்து போலிசார் விசாரணை செய்ததில் அவர் கதிர்காமம் பகுதியை சேர்ந்த பி.டெக் பட்டதாரி அனுசியா என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவிரடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் அவரை விட்டு சென்றதால் வருமானம் ஏதும் இல்லாத காரணத்தினால் துணி கடையில் ஏமாற்றி எடுத்து வந்த துணிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்யததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் இருந்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பிளான துணிகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்..

Views: - 226

0

0