திருக்கோவிலூரில் திரையரங்குகள் தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்!!

Author: kavin kumar
22 August 2021, 2:29 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள திரையரங்குகள் திறக்கப்படுவதையொட்டி தூய்மைப் படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல் தமிழகத்தில், ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஆனால், அதற்கு முன்னரே திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் 3 மாதங்களாக திறக்கப்படாத நிலையில், நேற்று தமிழ அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், மேலும், திரையரங்க பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி இருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் இயங்கிவரும் திரையரங்குகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் போது, திரையரங்க வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கு நடுவே கொரோனா குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டும் பணியும் திரையரங்க ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 மாதங்களுக்கு பின்னர், திரையரங்குகள் திறக்கப்படுவதையொட்டி, திரையரங்க உரிமையாளர்கள் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருக்கோவிலூரில் திரையரங்குகள் தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்!!

Views: - 177

0

0