காலி பணியிடங்களை நிரப்ப பணிகள் தீவிரம்…! சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்…

Author: Udhayakumar Raman
1 July 2021, 5:58 pm
Quick Share

சென்னை: காவல் நிலைங்களில் உள்ள காலி பணியிடங்ளை நிரப்ப பணிகள் நடைபெற்ற வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரம் ரவுண்டானா பகுதியில் சிசிடிவி கேமிராக்கள் மற்றும் ஏ.என்.ஆர் கேமிராக்களின் கண்காணிப்பு அறையை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். இந்த மையத்தில் , மாதவரம் பகுதியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமிராக்களின் பதிவுகள் கண்காணிக்கப்படுகிறது மொத்தமாக 60 – க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் , 4 ANPR என்று சொல்ல கூடிய (ஆட்டோ மெட்டிக் நம்பர் பிளேட் ரெககனேசன்) கேமிராக்கள் வைத்து கண்காணிக்கப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் ஆளினர்களுக்கு போக்குவரத்து ஒழுங்கு பணியின் போது பயன்படுத்த கூடிய 8 வகை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. பின்பு செய்தியாளர்களை சந்திந்த காவல் ஆணையர் பேசுகையில், காவல் நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப , பணிகள் நடைபெற்று வருவதாகவும் , விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என தெரிவித்தார்.

Views: - 107

0

0