பல கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல் என தகவல்: திருச்சி விமான நிலையத்தில் விடிய விடிய சோதனை..!!

19 July 2021, 9:55 am
Quick Share

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை விடிய விடிய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தங்கம் கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில்
ஷார்ஜாவில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நேற்று இரவு முதல் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை 12 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தல் தங்கத்தை பெற்று கொள்ள வந்த ஏஜண்ட்களைச் அதிகாரிகள் சுற்றி சுற்றிவளைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.

Views: - 83

0

0