தமிழக-ஆந்திர மாநில எல்லையில் தீவிர கண்காணிப்பு

11 April 2021, 5:35 pm
Quick Share

வேலூர்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக-ஆந்திர மாநில எல்லையில் சுகாதார துறை மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் தமிழக- ஆந்திர எல்லையில் அமைந்துள்ள வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மாநில சோதனைச்சாவடியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார துறை மற்றும் காவல் துறையை சேர்ந்த குழுவினர் ஆந்திர மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் வருவோர் முகக்கசம் அணிந்துள்ளார்களா என கண்காணித்து முகக்கவசம் அணியாவதவர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலர் திரும்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அதேபோல் காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்திற்குள் நுழையும் ஆந்திர மாதிலத்தை சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்றும் ஒவ்வொரு பேருந்தாக ஆய்வு செய்யப்படுகிறது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் 22 ஆயிரத்தி 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

21 ஆயிரத்தி 252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 356 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்புவரை நாள் ஒன்றுக்கு 8, 10 பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு வார காலமாக ஒரு நாளைக்கு பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Views: - 43

0

0