கந்து வட்டி: புகார் தெரிவிக்க தொலைபேசி எண் மாநகர காவல்துறை அறிவிப்பு

Author: Udhayakumar Raman
22 September 2021, 7:27 pm
Quick Share

கோவை: கந்துவட்டி,மீட்டர் வட்டி போன்ற பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முறையாக காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கைளை கோவை மாநகர காவல்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- கந்துவட்டி மற்றும் மீட்டர் வட்டி வதலிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை குடும்பச்சூழல் மற்றும் கொரோனா லாக்டவுன் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சமாளிப்பதற்காகவும் , வியாபாரத்தை மேற்கொண்டு நடத்துவதற்காகவும், பொதுமக்களும் , தொழிலாளர்களும், சிறு, குறு தொழில் நிறுவனங்களை சீரமைக்க தொழிலதிபர்களும் வட்டிக்கு பணம் கேட்டு கந்துவட்டி நிறுவனங்களை அணுகி பணம் பெறுகின்றனர். சில இடங்களில் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் நேரடியாகவே பொதுமக்கள், தொழிலாளர்களின் வீடுகளுக்கோ, சிறு, குறு தொழில் முனைவோர் நிறுவனங்களுக்கோ சென்று வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வருகின்றனர்.

கந்து வட்டிக்காரர்கள் சிலர் மீட்டர் வட்டிக்கும் பணம் கொடுத்து வசூலிக்கின்றனர். கந்துவட்டிக்கும்பலைச் சார்ந்தோர் அலுவலகம் அமைத்து செயல்பட்டால் காவல்துறையில் சிக்கிக்கொள்வோம் என்பதை தவிர்க்க அலுவலகம் அமைக்காமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்து பணம் கொடுப்பதும், வசூலிப்பதும் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள், கடன் பெற்றவர்கள், வட்டியையும், தவணையையும் அடுத்தடுத்து திருப்பி செலுத்த தவறும் போது, கந்துவட்டிக்காரர்கள் மனிதாபிமானமின்றி கடுமையான வார்த்தைகளால் பேசி, பணத்தை வசூலிக்கிறார்கள். பல நேரங்களில், அத்துமீறலில் ஈடுபடுகிறார்கள், கந்துவட்டிக்காரர்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளை குடும்பமானத்தை கருத்தில் கொண்டு கடனாளிகள் காவல் நிலையத்திற்கு சொல்லாமல் மறைத்து துன்பப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சிலர் விபரிதமான முடிவுகளை எடுக்கிறார்கள்,

கந்துவட்டி மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் . மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவே , கந்துவட்டி , மீட்டர் வட்டி பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முறையாக காவல் நிலையங்களில் புகார் செய்யலாம் அல்லது நேரில் வர இயலாதவர்கள் , குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியே சொல்ல தயங்குபவர்கள், கந்துவட்டிக்காரர்களை பற்றிய விபரங்களை அறிந்தவர்கள் அது குறித்த தகவல்களை கோவை மாநகர காவல்துறையின் அலைபேசி எண் 9498181213 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலமாகவும், தொடர்பு கொண்டு தெரிவிக்க கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் பற்றி தகவல் பொதுமக்கள் பற்றிய விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 136

0

0