அருந்ததியர் உள் இடஒதுக்கீடு விவகாரம் : முதலமைச்சர் பழனிசாமிக்கு குவியும் நன்றி..!

27 August 2020, 1:01 pm
CM meet- updatenews360
Quick Share

சென்னை : அருந்ததியர் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசின் நடவடிக்கைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பாராட்டுக்களும், நன்றிகளும் குவிந்து வருகின்றன.

அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த 2011ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை 5 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பட்டியலின மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அருந்ததியர் உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு பட்டியலின மக்களின் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மாநில ஆதிதிராவிடர்‌ நல குழுவின்‌ உறுப்பினர்‌ எஸ்‌. செல்வகுமார்‌‌, தமிழ்நாடு அருந்ததியர்‌ உரிமை பாதுகாப்புக்‌ குழு மாநிலத்‌ தலைவர்‌ டாக்டர்‌ மணிவண்ணன்‌, ஆதிதமிழர்‌ மக்கள்‌ கட்சியின்‌
பொதுச்‌ செயலாளர்‌ எஸ்‌.டி. கல்யாணசுந்தரம்‌, மாநில ஆதி ஆந்திரா அருந்ததியர்‌ மகாசபையின்‌ தலைவர்‌ இஸ்ரேல்‌, மாநில இளைஞர்‌ வழிகாட்டும்‌ பணியின்‌ தலைவர்‌ சி. பெருமாள்‌, தலித்‌ சேனா கட்சியின்‌ மாநில பொதுச்‌ செயலாளர்‌ எம்‌. நாகேந்திரன்‌, ஒண்டி வீரன்‌ தேசிய பேரவையின்‌ மாநில பொதுச்‌ செயலாளர்‌
டாக்டர்‌ வி. ராமச்சந்திரன்‌ மற்றும்‌ நிர்வாகிகள்‌ ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Views: - 11

0

0