இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய வேண்டும்: வேலூர் இப்ராஹிம் பேட்டி…

15 August 2020, 3:08 pm
Quick Share

சேலம்: தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எப்.ஐ. போன்ற இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று சேலத்தில் வேலூர் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தியாகிகள் நினைவு சின்னத்திற்கு தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாஅத் அமைப்பின் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விநாயகயர் சதுர்த்தி பெரும்பான்மை மக்களால் தேசிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனாவை தொற்றை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி விழாவை முடக்கக் கூடாது என்றும், தமிழக அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து சரியான நெரிமுறைகளை கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை தொடர்ந்து நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பெங்களூரு கலவரத்தில் திட்டமிட்டு காவல்நிலையம் மற்றும் பொதுமக்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, இஸ்லாமியர்களை தீவிரவாதத்தின் பக்கம் வழிநடத்தக்கூடிய எஸ்டிபிஐ மற்றும் பிஎப்ஐ அமைப்புகள்தான் காரணம் என்று கர்நாடக அரசு கூறியுள்ளது. இந்த அமைப்புகள் தமிழகத்திலும் செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த அமைப்புகளை தடை செய்து இவர்களின் வண்மை பிரசாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றார். அதிமுக மற்றும் பாஜக இடையே சிண்டு முடிந்துவிடும் வேலையை திமுக செய்து வருகிறது. வரும் நவம்பர் மாதம் ரஜினிகாந்த் தலைமையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்தால் மாற்றம் வரும் என்றார்.