சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதியில் இஸ்ரோ தலைவர் சிவன் தரிசனம்.!

6 February 2021, 1:58 pm
Quick Share

கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதியில் ஸ்ரோ தலைவர் சிவன் இன்று தரிசனம் செய்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன் இன்று சாமிதோப்பு தலைமைபதியில் தரிசனம் செய்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் (இஸ்ரோ) சிவன்,தனது மனைவி,மகனுடன் இன்று காலை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திலிருந்து சாமிதோப்பு அன்புவனத்திற்கு வந்தார். அவரை பால.பிரஜாபதிஅடிகள் வரவேற்றார்.பின்னர் முத்திரிகிணற்றில் முத்திரி பதமிட்டார்.பின்னர் சாமிதோப்பு தலைமைபதிக்கு சென்ற அவர் தலைபாகை அணிந்து திருநாமம் இட்டு வடக்குவாசல், பள்ளியறைக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். அவருக்கு தலைமைபதி சார்பில் பையன் கிருஷ்ராஜ் இனிமம் வழங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இஸ்ரோ தலைவர் வருகையையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.

Views: - 15

0

0