பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் எச்சரிக்கை துண்டு பிரசுரம் வழங்கல்

14 September 2020, 8:55 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூரில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் எச்சரிக்கை துண்டு பிரசுரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை துவக்கி வைத்தார்.

திருவாரூரில் சமூகப் பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை அறிவுரைப்படி பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதத்தில் சட்டம் 2012 அடிப்படையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எச்சரிக்கை எண்ணம் துண்டு பிரசுரத்தை திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை துண்டு பிரசுரத்தை துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அன்பழகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பொறுப்பு முத்துலட்சுமி, குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாஸ்கர் சங்கீதா ஆரோக்கியசாமி மற்றும் சைல்டு லைன் பணியாளர் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்