அகதிகளை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என கூறியது கண்டிக்கத்தக்கது: இயக்குனர் கெளதமன் பேட்டி

Author: Udayaraman
1 August 2021, 7:29 pm
Quick Share

திருச்சி: இலங்கை அகதிகளை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என மத்திய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என இயக்குனரும், பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான தமிழ் கெளதமன் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள கொட்டப்பட்டு முகாமை பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குனரும் தமிழ் கெளதமன் ஆய்வு மேற்கொண்டர். பின்னர் செய்தியாளர்களை சந்ததார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ஒற்றை குடியுரிமையோ, இரட்டை குடியுரிமையோ ஏதாவது ஒரு குடியுரிமை வழங்க வேண்டும். இலங்கை அகதிகளை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என மத்திய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அந்த வார்த்தையை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநர், குடியரசுத்தலைவர், மோடி ஆகியோர் போடும் நாடகம் இரக்கமற்ற நாடகம், அந்த நாடகத்தை கைவிட்டு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கோரிக்கை அளித்தால் அதை உடனடியாக பரீசிலிக்க கூடிய அரசாக தற்போது பதவியேற்றுள்ள தி.மு.க அரசு உள்ளது என தெரிவித்தார்.

Views: - 79

0

0