5 நிமிடத்தில் முடிந்துவிடும்..ரூ.700 ,10கிராம் வெள்ளி காசு கிடைக்கும்.! மகாராஜபுரத்தில் ஆண் கருத்தடை விழிப்புணர்வு பேரணி .!

30 November 2020, 1:24 pm
Quick Share

கன்னியாகுமரி : குமரி மாவட்டம் மகாராஜபுரம் ஊராட்சியில் ஆண்களுக்கான கருத்தடை விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாய்சேய் நலத்தை மேம்படுத்தி பிறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் கடந்த 1956 முதல் குடும்ப நலத்திட்டம் செயல்படுத்தபட்டுவருகிறது.

குடும்பநல அறுவைசிகிச்சை முறையை பெண்களே அதிகமாக கடைபிடித்து வருகின்றனர்.இருதயநோய், நீரழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பெண்கள் பாதிக்கபடும் போது பெண்கள் அறுவைசிகிச்சை செய்ய தகுதியற்றவர்களாகிவிடுகின்றனர்.

இதுபோன்ற சந்தர்பங்களில் மனைவியை சிரமபடுத்த விரும்பாத ஆண்கள் நவீனமுறையில் தழும்பில்லாத வாசக்டமி குடும்ப நல அறுவைசிகிச்சை முறை செயல்படுத்தபட்டுவருகிறது.ஆனால் இந்த அறுவை சிகிச்சையை செய்ய ஆண்கள் முன்வருவதில்லை.

எனவே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகஸ்தீஸ்வரம் யூனியன்,மகாராஜபுரம் ஊராட்சியில் வாசக்டமி கருத்தடை விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை மகாராஜபுரம் ஊராட்சி தலைவர் இசக்கிமுத்து தொடங்கிவைத்தார்.

Views: - 22

0

0