ஜெயங்கொண்டம் காவல் நிலையம் மூடல்…

5 August 2020, 6:21 pm
Quick Share

அரியலூர்; ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதன்மை காவலர்கள் இரண்டு பேர் மற்றும் காவல் நிலைய எழுத்தர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் மூடப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய முதன்மை காவலர்கள் இரண்டு பேர் மற்றும் காவல் நிலைய எழுத்தர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனையடுத்து 3 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டுள்ள 3 பேரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் நகராட்சி சார்பில் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. ஜெயங்கொண்டம் காவல் நிலையம் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களுக்கு வசதியாக புகார் பெட்டி காவல் நிலையம் முன்பு வைக்கப்பட்டு உள்ளது. காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.