வியாசர்பாடி பகுதியில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

1 November 2020, 1:24 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடி பகுதியில் 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சாரதா வயது 40 கணவரை பிரிந்து வாழும் இவர் துப்புரவுத் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்ற இவர் இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே இருந்த 12000 ரூபாய் பணம் மற்றும் எல்.இ.டி டிவி விலை உயர்ந்த பட்டு புடவைகள் உள்ளிட்டவை திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதே போன்று சுந்தரம் 5 வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி வயது 45 இவரும் நேற்று வீட்டை பூட்டி விட்டு  வேலைக்குச் சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 2000 ரூபாய் பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது வியாசர்பாடி போலீசார் 2 சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 18

0

0