சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

4 October 2020, 11:28 pm
Quick Share

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரின் பிரதான சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 16 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை நகர பகுதிக்குட்பட்ட கீழ இரண்டாம் வீதியை சேர்ந்தவர் சரவணன் இவர் அதே பகுதியில் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி உண்ணாமலை மற்றும் இவர்களது மகள் உள்ளிட்ட இருவரும் இன்று இரவு பொருட்கள் வாங்க நகரின் பிரதான சாலையான கீழராஜ வீதியில் நடந்து சென்றபோது மனோன்மணி அம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் உண்ணாமலை கழுத்தில் அணிந்திருந்த 16 சவரன் தங்க நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த உண்ணாமலை அருகேயிருந்த நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மனோன்மணி அம்மன் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து இருசக்கர வாகனத்தில் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை நகரின் பிரதான சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 16 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 41

0

0