வங்கி மேலாளரிடம் நகையை பறித்த இளைஞர்: சிறிது நேரத்தில் திருடனை பிடித்த கம்பம் போலீசார்

20 November 2020, 10:21 pm
Quick Share

தேனி: கம்பம் அருகே வங்கி மேலாளரிடம் நகையை பறித்த இளைஞரை கம்பம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உத்தமபாளையம் யாதவர் தெருவினை சேர்ந்தவர் சோலை முருகன். இவருடைய மனைவி ஆனந்தி. இவர் இன்று தனது உறவினர் திருமணத்திற்காக கம்பம் வடக்கு காவல் நிலையத்தின்அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளார். மேலும் திருமண மண்டபம் அருகே நின்றிருந்த போது திடீரென்று வந்த மர்ம நபர் கழுத்தில் அணிந்திருந்த நகயினை பறித்து சென்று விட்டார். உடனடியாக ஆனந்தி கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனந்திகொடுத்த புகாரின் அடிப்படையில் உடனடியாக செயல்பட்ட கம்பம் போலீசார்,

அப்பகுதியில் கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் கே.சிலைமணி, சார்பு ஆய்வாளர் திவான் மைதீன் ஆகியோர் தலைமையில் விசராணையில் மேற்கொண்ட போது, அப்பகுதியில் இளைஞர் ஒருவரை கைது செய்தனார். இந்த விசாரணையில், கம்பம் R.Rநகரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் விவேக் (30) என்பது தெரிய வந்தது. இந்நிலையில் கம்பம் போலீசார் உடனடியாக குற்றவாளியை பிடித்ததால் பொதுமக்கள் பாராட்டினார்கள். மேலும் ஆனந்தி அணிந்து இருந்த நகையின் மதிப்பு ரூபாய் 4 லட்சம் மதிப்பாகும் .மேலும் ஆனந்தி முத்துலாபுரத்தில் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மேலும் கைது செய்யப்பட்ட விவேக் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.

Views: - 0

0

0