தனியார் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கபட்டதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Author: kavin kumar
16 August 2021, 4:31 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தனியார் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கபட்டதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னையில் உள்ள சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் அண்மையில் தாக்கபட்டதை கண்டித்து அரியலூர் மாவட்ட தலைநகர் செய்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கருப்பு பேட்ஜ் அணிந்து செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மற்றும் தாலூகா செய்தியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 386

0

0