கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தேர்வு

Author: kavin kumar
22 October 2021, 2:32 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக புவனேஸ்வரி பெருமாள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 19 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற குழு உறுப்பினராக புவனேஸ்வரி பெருமாள் என்பவரை அனைத்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் மதியம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக் குழுவின் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்ட அலமேலு ஆறுமுகம் என்பவர் ஒன்றியக் குழுவின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்றியக்குழு துணைத் தலைவருக்கான தேர்தலும் மதியம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 88

0

0