புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்

3 August 2020, 8:25 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை காணொளி காட்சி மூலம் கமல்ஹாசன் வெளியிட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். மேலும் மக்கள் நீதி மய்யத்தைன் புதிய மாநில, தொகுதி மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகளை அறிவித்தார். தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டியது கடமை எனவும் அறிவுறுத்தினார். முன்னதாக மாஹே பிராந்திய நிர்வாகியிடம் மலையாளத்தில் கமலஹாசன் உரையாடினார்.

Views: - 5

0

0