கமலின் விக்ரம் படம் கண்டிப்பா அரசியல் சாடல் உள்ள அரசியல் படம் தான்: சினேகன் பேட்டி

8 November 2020, 11:36 pm
Quick Share

வேலூர்: கமலின் விக்ரம் படம் கண்டிப்பா அரசியல் சாடல் உள்ள அரசியல் படம் தான் என்று வேலூரில் மக்கள் நீதி மய்ய மாநில இளைஞரணி செயலாளர் சினேகன் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சமூக செயற்பாட்டாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி வேலூர் சாஸ்திரி நகரில் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சினேகன் கலந்துகொண்டு வேலூரை சேர்ந்த பல்வேறு துறையில் சமூக சேவையாற்றி வரும் 19 சமூக செயற்பாட்டாளர்களுக்கு விருதிகளை வழங்கினார்.


பின்னர் சிநேகன் பேசுகையில் மூன்றாவது அணியில் யார் யார் இருப்பார்கள் என சொல்வதற்க்கான களம் காலம் இது இல்லை. எல்லா கட்சியில் உள்ள நல்லவர்கள் ஒன்று சேர்வதர்க்கான அனேக வாய்ப்புகள் உள்ளது. நிச்சயம் அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, நல்லவர்களுக்கு மட்டுமே இங்கு இடம். நேற்று வெளியான கமலின் விக்ரம் படம் டீசர் சூசகமாக பல விசயங்களை கூறுகிறது. என்னை பொறுத்த வரை அரசியல் சாடல் கண்டிப்பாக இப்படத்தில் உண்டு, அரசியல் படம் தான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

மேடையில் பேச முடியாத சிலவற்றை கலை மூலம் பேசி தான் கமல் அவர்கள் தன்னை உயர்ந்த இடத்துக்கு எடுத்து சென்றுள்ளார். அதே போல இன்றைய கள அரசியலை பேசும் படமாக விக்ரம் இருக்கும். என்னை பொறுத்த வரை ஒரு நடிகராக எதிர்பார்க்காமல் ஒரு தலைவனாக கமலை திரையில் எதிர்பார்க்கிறேன் என்றார்.
மேலும் மக்கள் நீதி மய்யம் செய்யும் அனைத்தையும் மற்ற கட்சிகள் காப்பி அடிக்கிறது என்றும் சினேகன் கூறினார்.

Views: - 17

0

0