விதிகளை மீறிய பெட்ரோல் பங்க் சீல்! ஊரடங்கில் விற்பனை!!
23 August 2020, 2:05 pmகாஞ்சிபுரம் : விதிகளை மீறி பொது மக்களுக்கு பெட்ரோல் விநியோகித்த மாணிக்கம் என்பவரின் பெட்ரோல் பங்க்கை நகராட்சி ஊழியர்கள் சீல்வைத்தனா்.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிற பகுதிகளான காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்கள் சிறு கடைகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரத்தில் மத்திய சாலை களான காந்தி ரோடு காமராஜர் வீதி நெல்லுக்கான வீதி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் முக்கிய சாலைகளில் வாகனம் எதுவும் சொல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பின்புறத்தில் ஊரடங்கு உத்தரவுமீறி செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்க்கிற்கு நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் இறைச்சிக்கடைகள் மீன் கடைகள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் காஞ்சிபுரம் டோல்கேட், செவிலிமேடு, ரயில்வே நிலையம் அருகாமையில் உள்ளிட பல்வேறு பகுதியில் செயல்பட்டு வந்த தெருவோர மீன் கடைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.