ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றியடைய கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி: அர்ஜூன் சம்பத் பேட்டி

Author: Udayaraman
1 October 2020, 4:19 pm
Quick Share

ஈரோடு: ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றியடைய சென்னிமலையில் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக ஈரோட்டில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் ஈரோட்டில் ராமகோபாலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத் , ஆன்மீகம் தேசியத்திற்காக பாடுபட்ட ராமகோபாலுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்றார். மேலும் கறுப்பர் கூட்டம் தற்போது குருஜி என்ற பெயரில் செயல்பட்டு கந்தசஷ்டி கவசத்தை தொடர்ந்து அவமதித்து வருவதாகவும், இது குறித்து தமிழக முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அர்ஜூன் சம்பத் ஒரு நாடு ஒரு ரேசன் திட்டம் சிறப்பான திட்டம் என்றும் இந்த திட்டம் குறித்து தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவதூறு பரப்பி வந்தனர். அதனை முறியடித்து திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மீக அரசியல் அணியை உருவாக்கி வெற்றி பெற வைக்க இந்து மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றியடைய சென்னிமலையில் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அர்ஜுன் சம்பத் தெரிவித்த, மேலும் ஆன்மீக அரசியல் என்பது வளர்ச்சி ஊழலற்ற ஆட்சி ஆகும் என்றும் , அ.தி.மு.கவில் உட்கட்சி பூசல் கிடையாது தி.மு.கதான் தூண்டி விடுகிறது என்றார்.

Views: - 43

0

0