தீரன் சின்னமலை பிறந்த ஊரில் மணி மண்டபம் அமைக்கப்படும்… அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி…

2 August 2020, 10:54 pm
Quick Share

திருப்பூர்: தீரன் சின்னமலை பிறந்த ஊரில் மணி மண்டபம் அமைக்கப்படும் என கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாளை முன்னிட்டு, அவரது பிறந்த ஊரான, திருப்பூர் மாவட்டம் – காங்கயம் அருகேயுள்ள மேலப்பாளையம் பகுதியில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தீரன் சின்னமலை பிறந்த ஊரான மேலப்பாளையத்தில் மணி மண்டபம் அமைக்க தமிழக முதல்வரிடத்தில் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் திருப்பூர் மாவட்டத்தில் தான் பால் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படுவதாகவும் வருகின்ற பால் அனைத்தையும் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார் . மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லாத கறவை பசு ,வெள்ளாடு, கோழிகள் வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், எஸ்.பி. திஷாமிட்டல் காங்கேய சட்டமன்ற உறுப்பினர் தனியரசு உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு நடைபெற்றது.

Views: - 10

0

0