கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால உதவித் தொகை வழங்கல்

19 June 2021, 4:33 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயத்தில் தனியார் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் 132 பயனாளிகளுக்கு கொரோனா கால உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் செய்தித்துறை அமைச்சர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பழையகோட்டை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித் மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு திருக்கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழக அரசின் நிவாரண நிதியாக ரூ 4,000 மற்றும் 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமாக 642 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படஉள்ளது.

இன்று காங்கேயத்தில் 132 அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது இந்த விழாவில் காங்கேயம் தாலுகாவில் உள்ள கோயிலில் பணிபுரியும் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்று சென்றனர். விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முதல்வரின் உத்தரவின் படி கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் கொரோனா காலத்தில் உயிரிழந்த கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

Views: - 224

0

0