கட்டிட தொழிலாளி படுகொலை: போலீசார் விசாரணை

12 July 2021, 5:31 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயம் அருகே கட்டிட வேலை செய்து வந்த கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலிருந்து முத்தூர் செல்லும் சாலையில் உள்ள கணேஷ் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.இவர் கட்டிட வேலைகள் செய்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெள்ளகோவில் முத்தூர் பிரிவு அருகே மீன் விற்பனை செய்யும் கடை முன்பு வாலிபர் ஒருவர் தலை மற்றும் மண்டையில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. காவல் துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது செந்தில்குமார் என தெரியவந்தது.

இதையடுத்து கொலைக்கான காரணம் குறித்தும் கொலை செய்த நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு தேடிவருகின்றனர். மேலும் இந்த கொலைக்கான காரணத்தை அறிய கைரேகை பிரிவினரும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் குடிபோதையில் நண்பர்களுக்கு இடையேயான பிரச்சனையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்மமான முறையில் செந்தில்குமார் இருந்து கிடந்தது காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 232

0

0