குறுகிய காலத்தில் அதிக லாபம்.. மாணவர்களை கஞ்சா விற்க வைத்த கும்பல்

29 August 2020, 7:10 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 74கிலோ கஞ்சா பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் கொரோனா காலத்திலும் பள்ளி மற்றும் கல்லூரி வயதில் உள்ள மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடத்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடம் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்து இருந்தது தெரிவந்தது.

இதனையடுத்து அவர்கள் 3பேரையும் கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அருள் (எ) அருள்குமார், பிரதீப் (எ) பிரித்திவிராஜ், ராஜா (எ) கூகுள் என தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீமன் நகர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மேலும் 72கிலோ கஞ்சா மறைத்து வைத்து இருந்ததாகவும் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்ற போலீசார் மறைந்து வைத்து இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுடன் மேலும் யாரேனும் தொடர்பில் உள்ளார்களா என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கைப்பற்றப்பட்ட 74கிலோ கஞ்சா சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கஞ்சா சப்ளை செய்தவர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் அவர்களையும் கைது செய்வோம் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Views: - 31

0

0