கொட்டாரத்தில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ! இலாகமாக பிடித்த தீயணைப்புப்படை வீரர்கள்.!!

14 April 2021, 7:43 pm
kumari snake - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரி மாவட்டம் கொட்டாரத்தில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை இன்று தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

கொட்டாரம் திருக்குறள் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புதிய கட்டுமானப் பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கலுக்குள் பாம்பு இருப்பதாக கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கட சுப்ரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து செங்கலுக்குள் இருந்த சுமார் நான்கு அடி நீளமுள்ள கொடிய விஷத்தன்மை உள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர்.

Views: - 23

0

0