இயல்பு நிலையில் கன்னியாகுமரி .! சூரிய அஸ்தமனத்தை கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

25 November 2020, 9:27 pm
Quick Share

கன்னியாகுமரி: இயல்பு நிலைக்கு கன்னியாகுமரி திரும்பியதால் சுற்றுலா பயணிகள் சூரிய அஸ்தமனத்தை கண்டுகளித்தனர்.

தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் நிவர் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் அதற்கான எந்த முகாந்திரமும் இன்று மாலை வரை இல்லை. மாவட்டம் முழுவதும் இயல்பு நிலையில் காணப்பட்டது .

அதன் அடிப்படையில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனம் காண இன்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயிரத்துக்கும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இவர்கள் கடற்கரையில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தனர். பின்னர் தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.குமரி மாவட்டத்தில் தற்போது வரை புயலுக்கான எந்த அறிகுறி இல்லாததால் இங்கு இயல்பான சூழல் நிலவி வருகிறது.

Views: - 16

0

0