மது போதையில் தாய் மற்றும் மகனை தாக்கிய கிராம நிர்வாக அலுவலர்…
1 August 2020, 11:17 pmகன்னியாகுமரி: வெள்ளமடம் அருகே தாய் மற்றும் மகனை கிராம நிர்வாக அலுவலர் மது போதையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே குழுக்கள் மடத்தை சேர்ந்த செந்தில்கார்திகேயன். இவர் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் வில்லேஜ் அலுவலகத்தில் கிராம் நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருகிறார். நேற்று தேங்காய் திருடர்கள் தன்னை தாக்கியதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்துள்ளார். இவரும் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் வெள்ளமடம் அருகே கிராம நிர்வாக அலுவலர் மது போதையில் வந்து ஆசிரியர் மற்றும் அவரது தாயாரை வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்து வந்து அடித்து கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறி மூதாட்டி மற்றும் அவரது மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மீது அதே சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர். இதனால் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசரியர் இது குறித்து கூறுகையில், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்கார்திகேயன் எப்போதும் மது போதையில் இருப்பார் என்றும், நேற்று முன் தினம் மது போதையில் எங்களை அடைக்க வந்தார். அப்போது நாங்கள் வீட்டிற்கு சென்று கதவை அடைத்து விட்டு வீட்டில் இருந்தோம். அவர் எங்கள் வீட்டீன் கதவை உடைத்து உள்ளே அத்துமீறி வந்து என்னையும் ஏன் தாயையும் அடித்து தாக்கினார்கள் என கூறினார்.