கார்கில் போர் நினைவிடத்தில் தமிழிசை செளந்தரராஜன், ரங்கசாமி அஞ்சலி

By: Udayaraman
26 July 2021, 3:56 pm
Quick Share

கார்கில் வெற்றி தினத்தை புதுச்சேரியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போர்களிலேயே 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போர்தான் இன்று வரை மிகவும் தீவிரமான போர், இந்திய படைக்கும், பாகிஸ்தான் படைக்கும் இடையில் நிகழ்ந்த போரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்றது, இரண்டு நாடுகளிலும் இந்த போர் காரணமாக நூற்றுக்கணக்கான வீரர்கள் வீர மரணம் அடைந்தனர், இந்த போரில் வென்றதை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது,

அந்தவகையில் இன்று கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலை பிரெஞ்சு தூதரகம் எதிரே உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து போரில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர், முன்னதாக சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய் ஜெ சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் இராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Views: - 423

0

0