ஆண்களுக்கான நவீன கருத்தடை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கம்

26 November 2020, 1:49 pm
Quick Share

கரூர்: கரூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தையும், ஆண்களுக்கான நவீன கருத்தடை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் கரூரில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களால் கரூர் மாவட்டத்திற்கு என்று வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை கரூரில் உள்ள கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன், கரூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் பிரேம் நவாஷ், துணை இயக்குநர்கள் குடும்ப நலம் மருத்துவர் பிரியதர்ஷினி, பொதுப்பணிகள் மருத்துவர் சந்தோஷ், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும்,, இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து அதே பகுதியில் ஆண்களுக்கான நவீன கருத்தடை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஆகியோர் துவக்கி வைத்தனர். அரசு மருத்துவ கல்லூரியின் பழைய மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன், கரூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் பிரேம் நவாஷ், துணை இயக்குநர்கள் குடும்ப நலம் மருத்துவர் பிரியதர்ஷினி, பொதுப்பணிகள் மருத்துவர் சந்தோஷ்ம் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0