பிணத்தினை வைத்து அரசியல் செய்யும் மாஜிக்கு அமைச்சர் எம்.ஆர்.வி அதிரடி சவால் !

9 November 2020, 11:52 pm
Quick Share

கரூர்: மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் ஜெயிப்பது மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர நான் வெற்றி பெறுவேன் என்று செந்தில்பாலாஜி தோல்வி பயத்தில் உளறிக் கொண்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரூர் மாவட்ட அ.தி.மு.க கட்சியின் எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம் பகுதியில் நடைபெற்றது. அ.தி.மு.க கட்சியின் கரூர் மத்திய, தெற்கு, வடக்கு நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணியின் மாவட்ட செயலாளர் தானேஷ் என்கின்ற முத்துக்குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்புரையாற்றினார்.

அப்போது., 10 ஆண்டுகள் தி.மு.க வினர் காஞ்ச மாடுகள் போல காத்து கொண்டுள்ளனர். ஆட்சியில் இல்லை என்று அதற்கு பொதுமக்கள் இடம் கொடுத்து விடக் கூடாது. மேலும், இங்கு ஒருத்தர் (மாஜி அமைச்சரும், தி.மு.க கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி) கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க பெரும்பான்மையான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டு வருகின்றார். மக்கள் தான் அந்த 50 ஆயிரம் வாக்குகள் வித்யாச வெற்றியினை வாக்குகள் மூலம் தெரிவிக்க வேண்டுமே தவிர அவர் (செந்தில்பாலாஜி) தெரிவிக்க முடியாது.

ஆகவே 10 ஆயிரம் முறை வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தாலும் வெற்றியும் தோல்வியும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமென்றார். தமிழகத்திலேயே உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகிதம் அ.தி.மு.க கட்சியினர் வெற்றி பெற்றது கரூர் மாவட்டம், மக்களிடம் அ.தி.மு.க வின் திட்டங்களை சொல்வோம், உண்மையை சொல்வோம் ஆகவே அ.தி.மு.க கட்சிக்கு தான் கரூர் மாவட்டம் என்பதையும், 100 சதவிகித வெற்றியை அ.தி.மு.க விற்கு கொடுத்தது தான் இந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி.,

ஆகவே வெறும் வாய்சவடால் பேச வேண்டாம் 100 சதவிகிதம் இது அம்மாவின் (ஜெயலலிதாவின்) ஆட்சி தான். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 20 ஆயிரம் வாக்குகள் கரூர் தொகுதிக்கு கொண்டு வந்து விட்ட்தாக பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துள்ளாய், அப்போது அதிகாரிகள் என்ன தூங்கி கொண்டு இருக்கின்றார்களா ? என்று வினா எழுப்பினார். நாளை தோல்வி ஏற்பட்டால் இதை காரணம் சொல்வதற்கா ? என்றும் கூறியதையடுத்து எந்த வாக்குகளையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லை,

ஆகவே கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க கட்சி தான் ஜெயிக்கும், மேலும் தேர்தல் பயம் வந்த காரணத்தினால் மட்டுமே செந்தில் பாலாஜி ஏதோ உளறிக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். அதே போல, பேனர் வைத்ததில் சிறியவர்களின் பிரச்சினையை பெரிதாக்கியதோடு, ஒரு பெரியவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. ஆனால் அவரை அ.தி.மு.க வினர் தான் தாக்கினர் என்றும், பிணத்தினை வைத்து அரசியல் செய்து வரும் செந்தில் பாலாஜி, தி.மு.க வின் தலைமை எப்படியோ அதே போல தான் கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியும் பொய்யை மட்டுமே சொல்லி வருகின்றனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

Views: - 17

0

0