வீடுவீடாகச் சென்று வெற்றிவேல் வீரவேல் என்ற வாசகம் பொறித்த ஸ்டிக்கர் ஒட்டிய பாஜகவினர்

1 August 2020, 7:08 pm
Quick Share

கரூர்: கரூரில் வீடுவீடாகச் சென்று முருகன் படத்துடன் கூடிய வெற்றிவேல் வீரவேல் என்ற வாசகம் பொறித்த ஸ்டிக்கரை பாஜகவினர் ஒட்டினர்.

தமிழர்களையும், தமிழ் கடவுளான முருகனை இழிவு படுத்தும் விதமாகவும், இந்துக்களையும் இந்து மதத்தையும் புண்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட கருப்பர் கூட்டம் என்கின்ற youtube channel ஐ ஆங்காங்கே சமூக வலைதளம் மூலம் பரவ விட்டு, ஒட்டு மொத்த இந்துக்களை அவமதித்ததையடுத்து தமிழக அளவில் ஆங்காங்கே பா.ஜ.க வினர் மற்றும் இந்து முன்னணியினர் பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கருப்பர் கூட்டத்திற்கும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களையும் கண்டித்து கரூரில், கரூர் மாவட்ட பாஜகவினர் வீடு வீடாகச் சென்று ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.

இந்நிலையில்., கரூர் அடுத்துள்ள பசுபதிபாளையம், ராமானூர், பகவதி அம்மன் கோவிலில் இருந்து பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் ஏராளமான பாஜகவினர் கையில் முருகன் படத்துடன் கூடிய வேலுடன் ஆங்காங்கே வெற்றிவேல் வீரவேல் என்கின்ற வாசகம் பொறித்த டிஜிட்டல் ஸ்டிக்கரை ஒட்டினர். ஆங்காங்கே உள்ள வீடுகளின் உரிமையாளர்களின் அனுமதியுடன் அவர்களது வீட்டு வாசல் முகப்பு பகுதியில் வெற்றிவேல் வீரவேல் என்கின்ற வாசகத்துடன் கூடிய முருகன் பட ஸ்டிக்கரை பாஜகவினர் ஒட்டினார் இதற்கு இங்குள்ள பல்வேறு பகுதி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

Views: - 8

0

0