பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு: மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Author: kavin kumar
12 October 2021, 8:58 pm
Quick Share

கரூர்: கரூரில் நிதி நிறுவன அதிபர்கள் இருவர் தேசிய நெடுஞ்சாலை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். மேலும் மற்றொருவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜா (வயது 48), இவரது நண்பர் தில்லி (வயது 46) காஞ்சிபுரம் மாவட்டம் இவர்கள் இருவரும் ஒரு காரில் நிதி நிறுவனம் தொடர்பாக திண்டுக்கல் வந்து அங்கிருந்து திண்டுக்கல்லைச் சேர்ந்த தனது நண்பர் மனோகரன் (வயது 50) என்பது அழைத்துக்கொண்டு கரூர் வந்தனர் பின்னர் கரூரில் நிதி நிறுவனம் தொடர்பான வேலைகளை முடித்துக் கொண்டு நண்பர் மனோகரன் திண்டுக்கல்லில் விட்டுவிடுவதற்கு வருவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்

அப்போது அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராசி ஹோட்டல் அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து இடதுபக்கம் உள்ள பள்ளத்தில் பாய்ந்தது பள்ளத்தில் இருந்த பாறை மீது கார் படுவேகமாக மோதியதில் சிவராஜா மற்றும் மனோகரன் இருவரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தில்லி என்பவர் படுகாயத்துடன் கரூர் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

Views: - 233

0

0