கபசுரக்குடிநீர் காய்ச்சும் பணியினை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்ட ஆட்சியர்

24 August 2020, 9:55 pm
Quick Share

கரூர்: காந்திகிராமம்த்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கபசுரக்குடிநீர் காய்ச்சும் பணியினை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்ட பின்னர் பொது மக்களின் இல்லங்கள் தேடி நேரடியாக கபசுர குடிநீர் வழங்கினர்.

கரூர் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் காய்ச்சும் பணியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பின்னர் அதைத் தொடர்ந்து 38 வது வார்டு சாய்பாபா காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தங்களின் இல்லங்களுக்குத் தேடிச்சென்று கபசுரக் குடிநீர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :- நகராட்சி,பேரூராட்சி,ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் கபசுரக்குடிநீர் வழங்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் நான்காவது முறை இதுவரை கரூர் மாவட்டத்தில் 10 டன் அளவிலான கபசுர குடிநீர் வாங்கப்பட்டு பொதுமக்களுக்கு நான்காவது கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 15 வகையான அபூர்வ மூலிகை உள்ளது. இரவு ஊற வைத்த பின்னர் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள தனியார் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காய்ச்சி பொதுமக்களுக்கு நகராட்சி பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் மூலமாக ஒவ்வொரு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு மூலமாக கோரோனா கேர் சென்டர் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு மூலமாக ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதில் காலை உணவு, மூலிகை மருந்துகள், கபசுரக்குடிநீர், சுவாச குழாய்களை சீர்படுத்தும் மூலிகை மருந்துகள் உள்ளிட்டவை சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

Views: - 22

0

0