காவிரி ஆற்றின் குறுக்கு கதவணை பகுதியை மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஆய்வு

17 November 2020, 9:07 pm
Quick Share

கரூர்: கரூர் அருகே சுமார் 406 கோடி மதிப்பீட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா துவக்கி வைக்கப்பட உள்ள கதவணை பகுதியை மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தை அடுத்த நஞ்சை புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட சட்டமன்றத்தில் தமிழக முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 406.50 கோடி ரூபாய்ம் நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கதவணை திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா வருகின்ற 21ம் தேதி சென்னை வருமையின் போது தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி அப்பகுதியை வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கதவணை அமைக்கப்படுவது குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கரூர் மாவட்டம் நஞ்சை புகழூர் கிராமத்திற்கும், நாமக்கல் மாவட்டம் அனிச்சம் பாளையம் கிராமத்திற்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே 1056 மீட்டர் நீளத்தில் 73 மதகுகளுடன் இந்த கதவணை கட்டப்பட உள்ளதாகவும், இதன் மூலம் 0.8 டி.எம்.சி தண்ணீர் சேமிக்க முடியும் என்றும், இதன் மூலம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியும் என்றும், காவிரி ஆற்றின் வலது கறையில் உள்ள வாங்கல் வாய்க்கால் மூலம் 1458 ஏக்கர் பாசன வசதியும், இடது புறம் உள்ள மோகனூர் வாய்க்கால் மூலம் 2583 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன் கரூர், நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் ஆதாரம் மேம்படுவதோடு, நிலத்தடி நீர் மட்டம் உயருவதுடன் சுற்றுலா தளமாக அமைய வாய்புள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 15

0

0