கரூரில் தீபாவளிக்காக சிறப்பு புறக்காவல் நிலையம் திறப்பு: 46 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பு

7 November 2020, 8:22 pm
Quick Share

கரூர்: கரூரில் தீபாவளிக்காக சிறப்பு புறக்காவல் நிலையம் திறப்பு – 46 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றம் நடைபெறாமல் கண்காணிக்கப்படுவதாக கரூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு கரூர் நகரின் மையப் பகுதியான ஜவஹர் பஜார் பகுதியில் கரூர் நகர காவல் நிலையம் சார்பில் தீபாவளி சிறப்பு புறக்காவல் நிலையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புறம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார், ஆய்வாளர்கள் டிராபிக் மாரிமுத்து, கரூர் டவுன் சிவசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கரூர் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கோவை சாலை, ஜவஹர் பஜார், பேருந்து நிலையம், மேற்கு பிரதட்சணம் சாலை உள்ளிட்ட நகர் பகுதிகளில் என்று 46 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றம் நடைபெறாமல் கண்காணிக்கப்படுவதுடம் 3 தொலை தூர கண்காணிப்பு கேமராக்களும், 2 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்தார்.

மேலும், தீபாவளி பண்டிகைக்காக பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் பொருட்களை வாங்க வேண்டும் என்றும், கொரனோ தொற்று பரவுதல் இருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டும் என கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் கேட்டுக் கொண்டார்.

Views: - 15

0

0