கள் ஐ டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யவேண்டும்: இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனத்தலைவர் பேட்டி

By: Udayaraman
2 August 2021, 11:33 pm
Quick Share

கரூர்: கள் ஐ டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யவேண்டும் என கரூரில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனத்தலைவர் ராகம் செளந்திரபாண்டியனர் தெரிவித்தார்.

கரூரில் அனைத்து நாடார் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும், நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள ஹோட்டல் ஆரியாஸ் ல் நடைபெற்றது. இதில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் செளந்திரபாண்டியன் கலந்து கொண்டு ஆலோசனை வழஙகினார் .தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர். பனைத் தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு வேண்டும், கள் இறக்க அனுமதிக்க வேண்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடை அனைத்து இடங்களில் உள்ளது. ஆனால் உடலுக்கு சிறந்த பானமான கள்ளை அகற்றியது வேதனைக்குரியது. ஆகவே அத்தடையை அகற்ற வேண்டும் என்றார். மேலும், கள் ஒரு இயற்கையான பானம் அதற்கு தடை உள்ளது அதனை நீக்க வேண்டும்.

மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து டாஸ்மாக் கடைகளில் கள் விற்பனை செய்ய வேண்டும், நாடார் சமுதாய மக்கள் 15 சதவீத அளவில் உள்ளனர் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அவர் பனை வாரியம் அமைக்க வேண்டும், பனை ஏறும் தொழில் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். பனை மரத்தின் தமிழகத்தின் மாநில மரமாக உள்ளது. ஆகவே பனைமரத்தினை வெட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் லூர்துநாடார், மாநில பொருளாளர் பொறியாளர் எ.எம்.டி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில இளைஞரணி துணை செயலாளர் வைகை ரவி, மாநில துணை செயலாளர் கரூர் முருகேஷன், கரூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 163

0

0